கடல் அலைகள் | கவிதை | சபரி வள்ளி சங்கர்


அளக்க முடியாத வானின் நிறத்தை விழுங்கிய கடல்

அதில் வசிக்கும் அலைகளுகோ உள்நாட்டுப் போர்!

இதுவும் நிலத்துக்காக தான்

ஆனால் இது பிழைப்பதற்காக அல்ல  

கரை சென்று இறப்பதற்காக!


மரணிக்க துடிக்கும் அலைகள் ஒன்றுகூடி

முன் செல்லும் அலைகள் மேல்

பேரலையாய் போர்வாளை தூக்கியது


அந்தத் தாக்குதலில்

எஞ்சிய அலைகள், வேகமாய் துடுப்பு போட்ட

அக்கரையில் நாம் நின்று அவைகளை வரவேற்க காத்திருந்தோம்!

நம்மிடம் சிவப்புக் கம்பளத்தை எதிர்பார்த்தது அலைகள், ஆனால்

நேர்மாறாக அந்த அலைகளை நோக்கி ஓடி

மணல் சென்று காலத்தை முடிப்போம் என்ற கனவுடன் இருந்த அலைகளை கொன்று குவித்தும்...


அதன் உடம்பைத் துண்டு ஆக்கினோம்

அதன் உப்பிட்ட குருதியை பருகினோம்

அதன் குடும்பத்தின் மேல் விழுந்தோம்


சூறையாடிவிட்டு அதற்குள் இருந்து  புன்னகையுடன் எழுந்தோம்!

பல தாய்களை கொன்று விட்டு "அம்மா" என்று ஓடினோம்!

பல ஜோடிகளை பிரித்து விட்டு நாம் நம் ஜோடிகளுக்கு அன்பைப் பொழிந்தோம்!

 நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளைக் நசுக்கி விட்டு; இல்லத்திற்கு வெறும் உடம்பு வலியுடன் புறப்பட்டோம்! 


இதையெல்லாம் நோட்டமிட்ட சூரியன் ஒன்றை மட்டும் கூறிவிட்டு மலைகளுக்கு இடையில் வடிந்தது


"சாவுகிராக்கிகளால் சாகப் பட்ட சாவுகிராக்கிகள்!!!!"

Comments

Post a Comment