முதல் இரவு | கவிதை + கதை | சபரி வள்ளி சங்கர்

 


கட்டில் ஆடாமல்

பூக்கள் கலையாமல்

வேர்வை கலக்காமல்

நிமிடத்தில் முடிந்தது காமம்

ஆப்பிள் பழங்கள் சிரிக்க

அலங்காரப் பூக்கள் உச்சுக் கொட்ட

என் காம வாழ்க்கை இனிதே தொடங்கின

 நிழல்கள் நாம் கதவை கடக்கும் போதெல்லாம்

 நீ என்னை இன்பத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்வது மாறி "ஆ ஆஆஆஆ" என்று சமாளித்தேன்!

 பிம்பத்தோடு இன்பம் பெற முடியுமா?

 இந்தக் காம கதையை என் தோழிகளிடம் பகிர முடியுமா?

அவள்களின் கேலிச் சிரிப்பை விட

அவள்கள் பரிதாபப்பட்டு பரிந்துரைக்கும் டாக்டர் நம்பர்கள் தான் கொடுமை!

நான் சூடி வந்த மல்லிகை பூக்கள் எதற்கு

என் தலையை தாங்கும் இந்த தலகாணி மொக்க வா?

 நீ அளித்த காமத்தில் என் முலைக்காம்புகள் கூட திருப்தியாக இல்லை

ஆகையால் சுய இன்பத்தை நாடினேன்!

உதடில்ல வாழைப்பழத்திற்கு முத்தமிட்டு

அதன் வளவளப்பான தேகத்தை நாக்கில் ரசித்து விட்டு

எனக்குள் நுழைத்தேன்!

பேரின்பத்தின் போது

அந்த வாழைப்பழத்தை நட்டிய தோட்டக்காரன்க்கு நன்றியை முணுமுணுத்தேன்!

"ஆ ஆஆஆஆ" என்று நான் உண்மையில் கூச்சலிட

நீ உன் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு வர்ணிக்க முடியாத சலிப்புடன் "கொஞ்சம் கத்தாம இருடி" என்று கூறியது தான் என் கண்களை ஈரமாக்கியது! 

அழுதுகொண்டே அந்த வாழைப்பழத்தைச் சிவத்தில் சாத்திவிட்டு

நொறுங்கிய தாம்பத்திய மனக் கோட்டையை எண்ணி நிலா மறையும்வரை வேம்பினேன்!

 சிவந்த கண்களுடன் பகல் விடிந்து

முந்தானையில் மூக்கு சளியை சிந்திவிட்டு

 கதவை திறந்தேன்!

 வெளியில் அமர்ந்து இருந்த அனைவரும்

 கண்ணாடியைப் பார்த்து சிரிப்பது போல

 மார்பில் டைல்ஸ்சை பார்த்து  தோள்ளை குளிக்கி சிரித்தனர்

என் உதடுகள் வளைய தயாராக இல்லை

இரவு முழுக்க அழுது

தலை தூக்க கூட திறனற்று அவர்கள் முன் நின்றேன்

அதை அவர்கள் வெட்கம் என்று நினைத்துக் கொண்டனர்!

ஓரக்கண்ணில் பார்த்தேன் என் தாய் ஒரு சுவற்றில் சாய்ந்தபடி புன்னகையோடு அருவாமனையில் தக்காளியை கூறு போட்டுக் கொண்டு இருந்தாள்.

 அவள் கை அசைவுகளால் ஆடும் அந்த தொடையின் மேல் படுத்துக் கொண்டு

 நேற்றின் கொடூரத்தை விளக்க எண்ணினேன்

 இதே எண்ணத்தோடு அவளை நெருங்கினேன்

"ஏண்டி இங்க வர போய் மாப்பிள்ளைக்கு காபி போட்டு கூடு போ" என்று என் தாய் கூறியபோது

 என் கவலை என் அணுக்களை மோதியது!

சவக்கிடங்குயின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்ட

அனாதைப் பிணம் போல் சமையலறைக்கு நகர்ந்தேன்!

ஐந்து நிமிடத்தில் உருவானது சர்க்கரையும் சோகமும் அதிகம் நிறைந்த காபி!

ஒரு எவர்சில்வர் டம்ளரில் அதை நிரப்பி; தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு அறைக்கு கிளம்பினேன். அறையை நெருங்கும்போது நிமிர்ந்து பார்த்தேன் எவர் முகத்திலும் புன்னகை இல்லை வேறு எவளோ உட்கார்ந்து தக்காளியை நறுக்கிக் கொண்டு இருந்தாள். அனைவரும் அதே மார்பிள் டைல்ஸ்சை பார்த்து முறைத்தனர். ஒரு குழப்பமான நிலையிலேயே காப்பியோடு அறைக்குள் நுழைந்தேன். நுழைந்த பின் தான் புரிந்தது

என் கட்டிலை கலைத்து

ரத்தம் தேடியுள்ளனர் இந்த காட்டேரிகள்

எனக்கு இந்த காட்டேரிகளின் கொடுத்த காலை விருந்து கறி குழம்பும் இட்டிலியும்

அவருக்கோ கரியால் இட்லி மூடப்பட்டது

எனக்கோ குழம்பின் விழும்பில் தேங்கும் எண்ணெயில் ஊறப்பட்டது!!!!

Comments