வேதனையின் வலியுறுத்தல் | கவிதை | சபரி வள்ளி சங்கர்


 தண்ணீரில்லா பூமியில்

கண்ணீரை பருக எண்ணினேன்

இந்த எண்ணத்தை நிறைவேற்ற கண் மூடினாலும்

நான் நீரை வீணாக்கிய நினைவுகள் என் மனதை முட்டி கோபத்தை எழுப்புது! 

தண்ணீர் இல்லாமல் வெப்பத்தில் சல்லி சல்லியா நொறுங்கிய பூமி

என்னை மட்டும் தாங்குவது ஏனோ?

இந்த ஐயம் வந்த உடனே மரணம் உன்னை வந்து சேரும் என்ற வரம் கிடைத்திருந்தால்! இந்த வெயிலில் என் உள்ளமானது குளிர்ந்திருக்கும்

என்னைப் போல என் உள்ளத்திற்கும் ராசி இல்லை

"இனிமேல் உங்கள் வாழ்க்கையில் ஒளி மட்டுமே" என்று கூறிய அந்த ஜோதிடர் மட்டும் என் கையில் கிடைத்தால்? எவ்வாறு இருக்கும்

அவன் குருதியின் வாசனை என்ன?

அதிலும் விபூதி கலந்திருக்குமா?

இல்லை செந்தூரம் கலந்திருக்குமா?

என்று எண்ணி பல இரவில் கண்மூடி இருக்கிறேன்!

என் எச்சியைப் போலவே நமது மனித நேயமும் வரண்டு போனது

ஆஹா மனித நேயம் டைனோசர் போலவே இருந்து மரணித்த ஒன்று 

அவ்வப்போது கிடைக்கும் அதன் முட்டைகளை வைத்து என்ன புடுங்குவது, இறுதியில் அதுவும் போலி ஆகிறது!

அப்படிக் கிடைத்தால் அதை வைத்து ஆம்லெட் தான் போட வேண்டும்! அந்த ஆம்லெட்யின் ருசி தான் என்ன?

என்ற எண்ணத்துடன் இன்று கண்மூடிகிறேன்

மூடிய கண்கள் மூடிய படியே இருக்க வைப்பாயாக!

பல லட்ச கழுதைகளுக்கு தாலி கட்டினாலும் மாரி வந்து சேரா இடத்தில் எம்மை வாட்டி

நீ என்ன சுகம் கண்டாய்?



 


Comments