பள்ளிக்காதல் | கவிதை + கதை | சபரி வள்ளி சங்கர்
பள்ளிக்காதல்
வார்த்தையளவில் பள்ளியும் காதலும் சேர்ந்து இருந்தாலும், உண்மை நேர்மாறானது!
காதலையும் மோகத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஒரு வகை படித்த முட்டாள்கள் நாம்
அந்த கண்ணைக் கண்டு விழுந்தோம்
படிக்கட்டில் அவளை கடக்க பயந்தோம்
அந்த பயத்தை நண்பனிடம் பகிர்ந்தோம்
அன்றுதான் வினை வந்து சேர்ந்தது!
க்ளைமாக்ஸ்ல் குதிரையோடு நம்பிர் இடமிருந்து நாயகியை காக்கவந்த எம்ஜிஆர்யை விட அந்த செய்தி மின்னல் வேகத்தில் எங்கிருந்து எங்கோ சென்றது!
பேருந்து நிலையத்தில் கூரு போடப்பட்ட தர்பூசணியை விற்பவன் போல் அவளைக் கண்ட போதெல்லாம் என் பெயரை இலவசமாக வித்தனர்!
ஒரு நாள்,
அந்த மனம் கொத்திப் பறவை
டஸ்ட்ர்யை பெற்றுக்கொண்டு சிறகடித்தது
மேஜைக்கு மேல் உருவான டஸ்ட்ர் தூசிக்கு
குள் தம்பதினராய் நாங்கள் பனி சறுக்கு செய்தோம்!
அவள் மேல் பணி பந்துகளை எறிந்தேன்
அது சாளக் பீஸ்யை என்னை வந்து மோதி
எழுப்பியது!
முதன் முதலாய், பேச நெருங்கினேன்
கைகள் வெட வெடத்தது
உதடுகள் படபடத்தது
இதயம் கன கனத்தது
கால்கள் பின்வாங்க துடி துடித்தது
இறுதியில் அதன் ஆசையை நிறைவேற்றினேன்
மற்றொரு நாள், அவளிடம் பேசினேன் என் தாடை வலிக்கும் வரை பேசினேன்
சட்டென்று மனம் திறந்தேன்
எங்களுக்கு நடுவில் மௌனம் குத்தியது
இறுதியில் புன்னகை பதிலளித்தது
அவளை அணைத்து என் முத்தத்தின் சுடை அவளது உதடுகள் வழியாய் அனுப்பி இதயத்தை வருட செய்தேன்
ஆனால் அவள் உதட்டை என் தலகாணி போல் நாத்தம் அடித்தது
கண் விழித்தேன் இருள் கடந்து பகலானது.
நங்கூரம் இட்ட படகு மேல் அலையடித்து பயனில்லை.
அடிக்கும் அலைக்கு அது சொன்னாலும் புரியாது
அலைபாயும் இதயத்துக்கும் அதே தத்துவம் தான்.
தத்துவம் பேசும் தொண்டைக்கு
காதலை காக்கும் பொழுது தொண்டை அழைத்ததால் அது பேப்பர் பேணாவின் உதவியை நாடியது
என் காதலுக்காக பல பேப்பர் தன் உயிரை மாய்த்து
எஞ்சியிருக்கும் பேப்பர் இடமும் நான் ஹிட்லராய் நடந்து கொண்டேன்
என்னை சுற்றி பேப்பர் பிணங்கள் மிதந்த போது
என் கவிதை கரை சேர்ந்தது!
நான் அவளுக்காக எழுதிய கவிதை;
" உன் மயக்கும் கண்களை கண்டு மயங்காத ஆண்கள் இவ்வுலகில் உண்டா?
இந்தக் கேள்விக்கு நான் கனவில் உன்னிடம் பல தடவை பதில் அளித்துள்ளேன்
கனவில் அளித்து என்ன பயன்!
நேரில் உன்னைப் பார்த்து உன் கையைப் பிடித்து அந்த மணிக்கட்டுக்கு முத்தமிட்டு பதில் கூற விரும்புகிறேன்…
உனக்கும் விருப்பம் இருந்தால் 4:30 மணிக்கு Play ground க்கு வா… goal post-க்கு பக்கத்தில் நின்று கொண்டிருப்பேன்…"
அடுத்த நாள், எவரும் இல்லாத இடைவேளை பொழுதில் என் கடிதத்தை வைக்க உன் பையை திறந்தேன்; அதற்குள் உன் பெயரிட்ட கல்யாண பத்திரிக்கையை கண்டேன்
அந்த நொடிகளை கற்பனையாய் கூற முயற்சி செய்தால்;
இரண்டு விநாடிக்கு முன் ஆனந்தமாய் தாயிடம் பால் அருந்திக் கொண்டிருந்த குழந்தையைப் பிடுங்கி அந்தத் தாயின் கண் முன்னே அந்தக் குழந்தையை தீயில் வீசும் பொழுது அந்தத் தாயின் மன நிலை எவ்வாறு இருக்குமோ நான் அவ்வாறு உணர்ந்தேன்!
அங்கேயே நின்று என் தலையை எனக்குள் புதைத்து தேம்பித் தேம்பி அழுதேன்
இடைவேளை முடிந்து மணி அடிக்கப்பட்டது
அழுது கொண்டே அந்தப் பத்திரிக்கையையும் அந்தக் பயனற்ற கவிதையையும் உன் பைக்குள் வைத்து விட்டு உன் நினைவுகளோடு கிளம்பினேன்...
நான் முன் கூறியதை இங்கும் கூற ஆசைப்படுகிறேன்
"பள்ளிக்காதல்
வார்த்தையளவில் பள்ளியும் காதலும் சேர்ந்து இருந்தாலும், உண்மை நேர்மாறானது!"
( பத்து வருஷம் ஆச்சு இன்னு உன்னோட நினைவுகள் என்ன கட்டிப் போட்டு தினமும் சித்திரவதை பண்ணிட்டு இருக்கு, நீ எனக்கு விடுதலை தர மாதிரி தெரியல. எனக்கு பரவால்ல பழகிப்போச்சு ஆனா உன் பைக்குள்ள இருக்குற அந்த வீணாப்போன கவிதை பேப்பர் என்ன தப்பு பண்ணச்சே அதுகச்சு விடுதலை தரலாமே நந்தினி!)



Comments
Post a Comment