8:45 முதல் 12 வரை | சிறுகதை | சபரி வள்ளி சங்கர்
என் பாட்டி கதெ சொல்லுறப்போ கவனிக்காம இப்ப பாருங்க உங்க கிட்ட சொல்லுறதுக்கு என் கிட்ட கதையை இல்ல. அது இருந்த வர கதெயால எங்க வீட்டு ரெம்பி கழுத்து வர இருக்கும். ச்சி புலம்பத்தா னு எங்க அம்மா அதை அதட்டும். எல்லாத்தையும் கேட்டுட்டு ஹா வா டி போகாதவளே னு அம்மா ஓட கோணபிடென்ட்ல் ரகசியங்கள் அங்கு வெளிவரும். அப்பொ தான் என் மனுஷா காது பூனை காத மாரி என் பாட்டி பக்கம் திரும்பும். எப்ப கேக்கணும் போல இருக்கு. இப்ப மணி சேரிய 8:45 எப்ப ஏறுன கூட ஊருக்கு விடுவித்துக்கொள்ள போயிடுவேன் ஆனா 20 ருப்பையா வைச்சுட்டு எப்படி. பசிக்கவும் செய்தது. நாளைக்கி ஆச்சும் பேட கொடுத்தன நா நாளைக்கி நைட் பஸ் ஏறிட்டுவேன்.பாக்கணுன்னு தோணுது அங்க போன என் அம்மா கறி சோறு போடும். அந்த சோத்துக்கு எத்தனை வளையல் போட்டாலும் தகும். அணிக்கி சமபார்ல உப்பு அதிகமா இருந்துச்சுனு சாப்டா அம்மா முன்னாடியே உதைச்சனே ஐயோ! அந்த சாம்பார் கிடைச்சாகூட போதுனே குடிச்சுட்டு படுத்துடுவேனே எத்தனை நாள் தான் போர் தண்ணிலா வாய்த்த ரோப்புறது. இந்நேரோ என் குடல் எல்லா சுருங்கிப் போய் இருக்கும். முன்னாடியே அல்சருக்கு இதுல இது வேற வர போகுது ஆண்டவா... ஆண்டவனா? அந்த மூலமறிய பத்தி எதுக்கு பேசுறேன் அவன் எல்லாத்தையும் வாங்கிகிட்டு என்ன MNM மாரி அல்லவா குடுத்துட்டான். அல்லவா! அல்லவா! இருட்டு கடை அல்லவா, அண்ணாச்சி கடையில அஞ்சு ருப்பக்கு கிடைக்கிற அல்லவா, என் அம்மா வேண்டா வெறுப்பா கிடுன அல்லவா,அன்னபூர்ணா அல்லவா, இப்ராஹிம் வீட்டுல 9th ஸ்டேண்டர்ட் படிக்கிறப்போ சாப்பிட அல்லவா இதல்லாம் என் ஞாபாகல்ல வைச்சு என் என்னையே நா கொஞ்ச கொஞ்சமா கொன்னுடு இருக்கேன். ஞாபாங்களா கிடைக்கிற மகழ்ச்சி எப்பவுமே வேதனையை தான் தரும். வாழ்க்கைல மகிழ்ச்சி எப்படி வந்துட்டு பட்டாரு னு போயிடுதுல அந்த மாரி என் இந்த எழவு எல்லா போக மடிக்கிது என் இருந்து உசுர எடுக்குது. ஹாஹாஹா என் அப்பாயும் என்ன பாத்து இந்த தங் கேட்டாரு என் இருந்து உசுர எடுக்குறானு. அப்போ கெளம்புனவன் 21 வயசுல எப்ப என் வயசு 32 இன்னும் ஊருக்கு போகல இங்கயே ப்ரோடுச்டின்ல AD களுக்கு AD யா வேல செஞ்சுடு அங்கேயே சாப்பாடு சுத்திட்டு இருக்கேன். நா எல்லா ப்ரோடுச்டின் சாப்பாட்டுயும் நா சாப்பாடு இருக்கேன் எல்லா மண்னு மாரி இருக்கும். சொத ஏசிட் நானு வினோத் அண்ணனும் சாப்பாடுவோம். வினோத் அண்ணா சாப்புடுடே சொல்லுவாரு "சோபா சார் என்ன ஒருக்கா ஊமை விழிகள் படம் ஷூட்டிங்க்கு கூட்டிட்டு போனாரு அப்போ கேப்டன் விஜயகாந்த் போட்டாரு பாரு டா அது சாப்பாடு இது எல்லா காளி மண்னு " ஆனா அந்த காளி மண்ணா எவளோ ஏசுனாலு அதுதான் எங்க வாய்த்த ரோபுச்சு. 365 நாள்ல 364.5 நாள் காலைல பட்டாணி தான் அது என்ன டா.5 னு கேக்குறீங்களா சாத்தியமா என்னனு எனக்கும் தெரியல பசில என்ன என்னமோ ஒளறேன். அது எனக்கே தெரிந்து. பேசாம இருந்த என் வயிறு கத்துற சத்தம் எனக்கு தல வலிய குடுக்கும். தல வலி வந்த எனக்கு காப்பி குடிச்சே ஆகணு பிடி புடிச்சு ஆகணு என் கிட்ட இருக்குற 20 ருப்பய்யவும் நா முடிச்சு கட்ட விரும்புல. அந்த நாளா தா பேசிட்டு இருக்கேன். என் பாட்டி மாரி ஆயிட்டு வரேன் வாடா பிளாக குஞ்சு னு மட்டும் தான் உங்கள கூப்புடல மத்தபடி நா என் பாட்டி தான். என் பாட்டி பத்தி எவளோ பேசுறது இது தா முதல் தடவ நேத்து என் சயின்ஸ் வாத்தி ஸ்டீபன் பத்தி பேசுனன் நேத்து வந்தது இருந்திகானா அந்த மாயா கண்ணன் ஸ்டீபன் புகழ பத்தி தெரிஞ்சுருக்கும். மிஸ் பண்ணிட்டீங்க.
இந்த மிஸ்ங்கற வார்த்தையா சொல்லவே நாக்கு ஒரு மாரி ஆகுது. அதுக்கு காரணம் என் பிரண்ட் தங்கவேலன் சினிமால கமலகாந்த் னு பேர மாத்திகிட்டான். நடிகிறது கொசுராம் பேர மாத்தி தாளவாடி ல இருந்து ஈரோடு டவுன் சார் னு மாத்தி வாழற வாழ்க இருக்குல சார் நாய் பொழப்பு. சொல்லுற பக்கம் எல்லா மொக்குற நாய் பொழப்பு.அவன் என் ரூம் ல தான் தாங்கி இருந்தான் ஒரு ஒரு நாளும் பாலு வேலைக்குறானோ இல்லையோ நெறய ஐயப்பன் ஸ்டூடியோக்கு போய் அவன் போட்டோ வ நாலு பிரிண்ட் போட்டுட்டு தா கமலகாந்த் வேற வேலைய பாப்பான். எவளோ போட்டோ பிரிண்ட் எடுத்தாலும் சரி கமலகாந்த் க்கு எவனு வாய்ப்பு குடுக்கலா.அந்த டைரக்டர் மேல இருக்குற கோவத்த புடிச்சுட்டு இருக்குற தம் மேல கடுவான். நல்ல ஊதிட்டு இருப்பான் டக்குனு பத்தி தம் லேயே கால போடு மிதிச்சுட்டு "கொம்மால ஜஸ்ட் மிஸ் டா" னு சொல்லுவான் இதே மாரி ஒவ்வொரு தடவையும் பண்ணுவான் அவன் சும்மர் 600- 700 ஆடிஷன் போய் இருப்பான் அப்போ நெனைச்சு பாருங்க 600 -700 ஜஸ்ட் மிஸ், 600 - 700 தம் மிதிச்சு நாசமா போய் இருக்கும் கேக்குற உங்களுக்கே கோவம் வருதுல அப்போ பாக்கெட் ல வேறும் காத்த மட்டும் புடிச்சு வைச்சு இருக்குற எனக்கு எவளோ கோவம் வரும். எனக்கு அந்த பயல கொள்ளணு போல வெறி ஏறும் நான் எனக்குள்ள நெனைச்சத அவனுக்கு கேட்டு இருக்கும் போல அவனே ஒரு நாள் செத்துடன். அதும் அந்த மெரினா பீச்சா கடல பாத்துட்டே செத்துடன். அவன் சாகும் போது அந்த மெரினா கடல் அவனுக்கு அவன் பொறந்து வழந்த தாளவாடி மண்ணா மலையா தான் தெரிச்சு இருக்கும்னு எனக்கு நிச்சயமா தெரியும். ஏன அப்படி சொல்லுறான எனக்கும் வர வர அந்த மெரினா கடல் என் வீட்டை தெரிய ஆரம்பிகிது. அந்த அலை சத்தம் என் பாட்டி கதையை கேக்குது. அந்த தண்ணி என் அம்மா சாம்பாரா மாரி ரொம்ப வருஷம் ஆச்சு. என்னையும் எப்போ வேணா நீங்க நியூஸ் ல பாக்கலாம் "மெரினா பீச்சில் தூக்கத்திலே மரணம் இது இந்த வாரத்தில் நான்கு" விரு விருப்புகாக "இது உண்மையில் தற்கொலைகள் தானா இல்லை பேயின் வெறி செயலா?" னு நியூஸ் வரலாம் கத்துருங்க. அந்த நியூஸ் எழுதுறவனும் என்ன மாரி கமலகாந்த் மாரி ஒரு காலத்துல மெரினா பீச்ல அவன் ஊரையோ அவன் வீட்டையோ அவன் விதியையோ அவன் பாத்து இருப்பான். அவனே உண்மையா எழுத நினைச்ச கூட அந்த பிரஸ் இங்க் அதுல பட்டது அந்த மெஷின்னே கட் பண்ணிடும். மக்களின் உண்மை வாட படாத உங்கள் பிரஸ் மெஷின்.
இப்ப மணி 9 ஆச்சு சின்ன வயசுல இருதே 12 ஆகம தூக்கம் வந்ததே கிடையாது. ரூம்ல ராத்திரி முழுக்க அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுட்டே இருந்த உங்களுக்கு தூக்கம் வருமா? காலைல உருண்டுட்டு சண்டை போடுவானுக ராத்திரி tired ஆய் பாத்துட்டுட்டு சண்டை போடுவாங்க. அந்த சண்டை பேரும் பாளும் ரேகா அத்தை அவங்க என் அப்பா ஓட சின்ன வீட்டு. அம்மா க்கு அவங்கள புடிக்காது ஆனா எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும் அவங்க ரொம்ப நல்லவங்க அவங்க எனக்கு பல தடவ சினிமா போறதுக்கு காசு குடுத்து இருக்காங்க. அவங்க அந்த காச குடுக்கலான எனக்கு சினிமா ஆசை வந்தது இருக்குமானே தெரியல. ரேகா அத்த நீங்களும் ஒரு காரணம் எப்படி இங்க 20 ருப்பையா வைச்சுட்டு புலம்பிட்டு இருக்குறதுக்கு.
பசிக்கிது அத்த. இந்த வார்த்தையா நா சொல்லி நீங்க கேட்டு இருக்க மாட்டீங்க. என் மூஞ்ச பாத்தே எனக்கு பசிக்கிது னு கண்டுபிடிச்சிடுவுங்க. எப்போ உங்க வாசலுகு வந்தாலும்
"ஏன டா திரும்ப போய் கதவ சத்திகிடல"
"ஹ்ம்ம்"
"என் புரமம் தான?"
"ஹ்ம்ம்"
"சரி உள்ள வா கை கழுவிட்டு ஒக்காரு பருப்பு துவையல் பண்ணிருக்கேன்"
நீ பண்ணுற பருப்பு துவையல் ஏம்மா ருசியா இருக்கும் அந்த வீனா போன ஊரு உன்ன தொரத்தமா இருந்து இருக்கலாம் எல்லா என் அம்மாவாள வந்தது புலம்பி புலம்பி ரேகா அத்தைய தொரத்திட்ட. நா ஸ்கூல் ல இருந்து வரத்துக்குள்ள எல்லா முடிஞ்சு போய்ச்சு ஒரு டாடா கூட சொல்லல. ஒரு வேல அணிக்கி அத்தைய பாத்து இருந்தன்னா கண்டிப்பா அத்த கூடாயே போய் இருப்பேன்.வாக்கல.
பல நேரம் தூக்கம் இருக்காது தூக்கம் இல்லாத நாளா சாப்டாது ஆகாது புளிச்ச ஏப்பம் வரும். சூடு ஏறி சில நேரம் வாய்த்தல போகும் தயிறு எல்லா வாங்க காசு இருக்காது பக்கத்து ரூம் ல எண்ணை பாக்கெட் வாங்கி தொப்புள்ள சுத்திட்டு படுத்துடுவேன். வயிறு சரி ஆகுறதுக்கு முன்னாடியே ப்ரோடுச்டின் சாப்பிட வேலுது காட்டுவேன். வேற எண்ணை பண்ண சொல்லுறீங்க அந்த ஒரு வேலைய விட சாப்பாடு கிடையாது ஈவினிங் சாப்புடுற டீ பஜ்ஜி க்கு நைட் குடிக்கிற போர் தண்ணி எவ்வளயோ மேல் னு தோணும்
சாப்படவே இல்ல ஆனா குசு வருது
வந்த குசு க்லோரோபார்ம் வாடை அடிக்கிது
ஐயோ சாரி ங்க டாக்கானு தோணுச்சு அதான் சொன்ன இந்த மாரி கவிதைகள் நெறய எழுத்தி வைச்சு இருக்கேன். படிக்கிறேன் கேக்குறீங்களா?
"ஐயோ எங்க போன எங்க போன
டாக்டர் சொன்னத வாங்க போன
இந்த போட்ட வலி போயிடுமா
போயிடும்னு போய் சொன்னாங்க"
"நான் அவளை பாவாடை தாவணியில் பார்த்திருக்கிறேன்
நான் அவளை கூரை புடவையில் பார்த்திருக்கிறேன்
அவள் அழகுக்கு கண்டிப்பாக கற்பழிக்கப்பட்டாள் என்று நினைத்தேன்
நான் நினைத்தது நடந்தது
இப்பொழுது என் முன் அம்மணமாய் இருக்கிறாள்
அவள் பக்கத்தில் வெள்ளை சேலை
என் நற்பது வருட காம பசியை அங்கு தின்னு தீர்த்தேன்"
சொல்லணுனா சொல்லிட்டே போகலாம் ஆனா வேண்டாம் என்னா கலையில திருடனுங்க நிறைய பேர் இருக்கானுக நம்ம தா ஜாக்கிரதையா இருக்கணுனு இந்த 12 வருஷம் 5 மாசம் 6 நாள் 2 மணிநேரம் மெட்ராஸ் எனக்கு சொல்லி குடுத்து இருக்கு.
ஆமா இபோ மணி எத்தன? 11:15. இன்னு நபத்தி அஞ்சு நிமிஷம் இருக்கு. ஹ்ம்ம் வேற என்னத்த பேசுறது பேசு ஒன்னுமே இல்லையே. சந்தோச படுற வித்தியாச பேச ஆரம்பிச்ச அது சோகத்துல முடிந்து சரி சோகமான விஷியத்தை பேசுனா சந்தோசம் கிடைக்கும் னு நெனைச்சா ஏன அது ஏமாத்துது. மக்களையும் மண நிலையும் ஒன்னு. ஏன என்னமோ ஒளறிட்டு இருக்கேன்ல எனக்கே தெரிந்து ஏன பண்ணுறது பேசின இருந்த ச்சி அத தன் சொல்லிட்டேனே.
வேற என்னத்த சொல்லுறது சரி ஒரு செத்து போனவ இருக்க அவளை பத்தி சொல்லுறேன் அவ பேரு தேவிகாலக்ஷ்மி. அவ ஒரு வாரம் முன்னாடி தான் செத்து போன. அவ அத ப்ரோடுச்டின் ரூம் மே எல்லா சுத்தம் படுத்துறவ அவ சுத்த படுத்துன தூசி 2 மடங்கு ஆகும். கை வைக்கிற பக்கம் எல்லா தூசி மட்டும் தா. அவளை வேலையில இருந்து தூக்கமா என்னத்த புடிங்கிட்டு இருந்தானுங்க னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. அவளை தூக்கமாடேங்க ஏன அவ தா மார்புல கை வைச்ச ஒன்னு சொல்ல மாட்ட பின்னாடி தடவுனா சிரிப்பா வேற இவளச்சும் வந்த இவனுக சந்தி சிரிச்சிட்டும் ல அத நாளா அவளை அங்கேயே வைச்சுக்கிட்டானுக. ஒரு வாரம் ஆலயே காணோ இவனுக கை வேற பாரா பரன்னு அரிக்க ஆரம்பிச்சிடுச்சு அதனால ஒருத்தன அனுப்பி அவளை கூட்டிட்டு வர சொன்னானுக கூப்பிட போனவன் அவ எய்ட்ஸ் ல செத்து போய்ட்டானு செய்தி ஓட வந்தான் கொஞ்ச பேரு அங்க இருந்து தெறித்து ஓடுநானுங்க நிறைய பேரு "போச்ச தொட எய்ட்ஸ் வருமா டா" னு கேட்டானுக.
அப்புறமும் திருந்துவார்களா இல்ல அவ பொண்ண கூப்பிட்டு வந்து நாசம் பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க. எங்கு போய் முடியுது னு பார்ப்போம். சொல்ல முடியாது ஒரு நாள் என் பிட் நியூஸ் க்கு மேல் பிட் நியூஸ் கூட வரலாம்
அப்பறம் அப்பறம் அப்பறம் வேற வேற நீங்க ரொம்ப கடைசியா வந்தது இருக்கிங்களா அத நாளா என் கிட்ட சொல்ல ஏதும் இல்ல. திரும்ப திரும்ப ஒரே கதையை சொன்ன எனக்கே போர் அடிச்சுரும். சினிமால தான் அப்படினா இங்கயுமா.
ஆஹ்ஹ்ஹ்ஹ! ரைட்டு எனக்கு கொட்டாவி வந்திருச்சு நா தூக்க போறேன். நாளைக்கி பாப்போம்.ஐயோ மறந்துட்டேனே பஸ் ல ஒருத்திய பாத்தேன் இன்னிக்கி ச்சி மறந்துட்டேன் அவளை பத்தி நாளைக்கி சொல்லுறேன் ஞாபாகா படுத்துங்க. நல்ல இன்டெரெஸ்ட்டிங் ஆனா கத... சரி குட் நைட்...
என்று கூறி அவன் பய்யை எடுத்து போடு படுத்த பிறங்கு பசியால் கொஞ்சம் உருண்டன் அப்பறம் வாய்த்தாய் இருக்க பிடித்து கொண்டு தூங்கி போனான்.
"காரமா காரக் கொளம்ப
உறிஞ்சு உறிஞ்சு சாப்டுட்டேன்
கண்ணால புற தண்ணி
கரதுனால இல்ல"
"பாயசத்துல முந்திரி இருந்துச்சு
முதரியலையே நிரம்பி இருந்துச்சு
அது என் அக்காவுக்கு படைச்சது
வினா போயிடும் குடிச்சு முடிச்சுட்டு குடிச்சு முடிச்சுட்டு னு சொல்லுட்டே இருந்தாங்க
அத எங்க இருந்து ஆரம்பிகிறதுனே தெரியல
அக்கா இருந்துறுத்த சொல்லி குடுத்து இருப்ப"
"உள்ள போ சார் உள்ள போ
சிக்கன் பிரியாணி இருக்குது
வெஜி பிரியாணி இருக்குது
புரோட்டா இருக்குது
சப்பாத்தி இருக்குது
வா சார் வா
பாத்ரூம் எங்க னா இருக்குது
அவர் கண்ணு ஏன மேல கீழ பாத்துது
பாத்துட்டு சொன்னது
உன்ன மாரி காசு இல்லாதவைகளை
வெறி ஏதாவே கிட்சேன் பக்கத்தில இருக்குது "
இந்த மரியான பசி கவிதைகளை அந்த நோட் முழுக்க பரவி இருந்தது. அவன் மேல் சுத்தி கொண்டு இருந்த பேன்னோ அவன் வைப்பு கேட்டு சந்தித்த டைரக்டர்களை போல அந்த கவிதைகளை மெலோடமை புரட்டிக் கொண்டு இருந்தது...
"அந்த பேன் அதை வேறும் பேப்பர் என்று நினைக்கிறதே என்று கவலை படுவத?
இல்லை அந்த புரட்டளுக்கு மின் இன்றாவது அது பஜ்ஜி கடையை தப்பித்ததே என்று சந்தோச படுவத?"


Comments
Post a Comment