ஓ பட்டர்பிளை | கவிதை + கதை | சபரி வள்ளி சங்கர்


 

இடியுடன் மழை பெஞ்சுட்டு இருந்துச்சு என்னால ரோட்ட பாக்கவே முடியல அதனால கார்யை ஓரமாக நிப்பாட்டிட்டு ரேடியோவை வேற சேனலுக்கு டியூன் பண்ண… எனக்கு ரொம்ப பிடிச்ச "ஓ பட்டர்பிளை" பாட்டு ஓட்டிட்டு இருந்துச்சு என் ரைட் சைடுல ஒரு இரண்டு கடை தள்ளி ஒரு துணி கடை ஷெட்க்கு கீழ ஒரு பொண்ணு நின்னுட்டு யாருக்கோ வெயிட் பண்ணிட்டு இருந்துச்சு


 எனக்கு நேரம் போகாத; காரணத்தினால


அந்த பொண்ணுக்கு ஒரு கவிதை எழுத முடிவு பண்ண: 


"யாரும் இல்லா கடைவீதி

உன் மேல் என் பார்வையும்

சாலை மேல் உன் பார்வையும்

மட்டும் நிறைந்திருந்த கடைவீதி!


உன் ஸ்டிக்கர் பொட்டு எங்கே? ஆஹா அது கூந்தலுக்குள் சிக்கி இருக்குது

உன் கண்மை எங்கே? அது கருவளையத்தோடு உறவாடுது 

உன் கால்கள் எங்கே? அது பருவம் அடைந்து சேலைக்குள் வசிக்குது!

உன் நிழல் எங்கே? அது உறவினர்களை கண்டது போல உன் முதுகுக்கு பின்னால் வெக்கப்பட்டு இருக்குது!


அந்த மழை வாசனை என் மூக்கை அடைத்த பொழுது, உன் வாசனை எனக்கு விக்ஸ் ஆனது!


அந்த புணரும் மேகங்கள் விலகத் தொடங்கியது

அதனால் அதன் வேர்வை துளிகள் மண் வந்து சேராமல் துண்டித்து போனது!


எண்ணெயில் போட்ட சீரகம் பொறிவது போல நீ உச்சு கொடுவது SPB-யை தாண்டி கேட்கிறது!


நான் கேட்க முடியாத தூரத்தில் இருந்தாலும்

உன் உதட்டின் அசைவுகள் புரிகிறது;

என்னைப் போலவே என் காரும் உன்னை என்னிடத்தில் சேர்க்க துடிக்கிறது!


அவ பக்கத்துல போய்ட்டு ஹார்ன் அடிச்சேன்,

 அவ என்ன பார்த்த உடனே பயந்து ஓட ஆரம்பிச்சிட்டா; நா அவளை துரத்த ஆரம்பிச்சேன்.


இல்ல இல்ல தப்பு!!!!


நா பயந்து ஓட ஆரம்பிச்சேன் அவ என்ன துரத்த ஆரம்பிச்சா! கால் இல்லாம…


நான், இருளோடு இருளாய்

என் ரத்தம், மழையோடு மழையாய்

 என் உயிர், காற்றோடு காற்றாய்

என்னைத் கொன்று விட்டு அவள் பறக்க


என்னைக் காக்க

சடாயு கழுகும் வரவில்லை ஒரு மயிரும் வரவில்லை!!!


Comments