மீண்டும் காணக்கிடைக்காத பெண்கள் | கவிதை | சபரி வள்ளி சங்கர்
"!!!" இது ஒரு வரியில் வந்துவிட்டது என்றால் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே இருந்த தொடர்பு முடிந்து விட்டது என்று அர்த்தம். அதற்குப் பிறகு வரும் வரிகளுக்குச் சொந்தக்காரர் வேறு பெண். ( இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)
வெள்ளைத் தாளில் உன்னை நிரப்பி
உண்மைத் தளும்பும் பொய்களை
இந்த உலகுக்கு சத்தமிட்டுச் செல்ல
ஒரு அஞ்சு ரூபா பேனா கூடு மல்லிகை கடை அண்ணாச்சி மகளே என்று கூறி முடிப்பதற்குள் நான் போகவேண்டிய 15A பஸ்யின் சத்தம் என் புற மண்டையை அடித்தது!!!
வெறும் அனல் காற்றின் துணையோடு இயங்கும் கோடை மதியம்
கருவேலகள் பூத்துக் குலுங்கும் மண் பாதையில்
தாய் ஆட்டை துளைத்த ஆட்டுக்குட்டி போல்
நெத்தியில் என்னையும் வேர்வையும் கலந்த படி
என்னை நீ கடக்க உன்னை நான் கடக்கும் போது எனக்குள் எழுப்பிய ஒரே கேள்வி இதுதான்
"ஆடிப்பாடி மண் கோபுரங்கள் படைக்க வேண்டிய உன் கரங்களுக்கு தாலி வேலி போட்டவன் எவனோ?"!!!
பஸ்யின் நெரிசலில் ஒரு வாடிய மல்லிகைப்பூ அகப்பட்டது
ஒரு ஸ்பீட் பிரேக்கிரின் அதிர்வில் அதன் முகம் காண கிடைத்தது
சோர்வின் எடுத்துக்காட்டாய் கண்கள்
இளையராஜாவுடன் முனுமுனுக்கதா உதடுகள்
காதின் இடுக்கில் வெறுப்புடன் நீ சொருவிய கூந்தல் எதிர்காற்றில் தத்தளிப்பது கூட ஒருவகையில் அழகுதான்
அடுத்த ஸ்பீட் பிரேக்கர் வரும்வரை
அப்படி வந்தால் ரோடு காண்ட்ராக்டரை ஏசா
என் உதடுகள் தயாராக இருந்தது
பஸ் குலுங்க ஆரம்பித்தது
என் அன்புள்ள ரோடு காண்ட்ராக்டர்க்கு!!!
லைன் வீட்டில் நடு வீடு காளி
அதிலிருந்து ஒருநாள் பூட்டு திறக்கும் சத்தம் கேட்டது
கண்ணம்மா வீட்டை சுத்தம் செய்ய உள்ளே நுழைந்தாள்
பங்கஜம் நுழைந்தால் அழகி குடியேறுவாள்
அவள் தாய் கண்ணம்மா நுழைந்தால் கிழவி குடியேறுவாள் என்பதுதான் என் மனக்கணக்கு
திடீரென்று சூழ்நிலை எங்களை புரட்டிப் போட
தங்கியிருந்த வீட்டை காளி செய்தோம்
கட்டப்பை கடலின் மத்தியில் அமர்ந்தேன்
அப்போது அந்த நடு வீட்டுக்கு குடியேற வேறு ஒரு டெம்போ வந்தது நின்றது
எங்கள் டெம்போ அவர்களை கடக்கும் பொழுது நோட்டமிட்டேன்
என் மனக்கணக்கு தவறாகிவிட்டதே கண்ணம்மா!!!
காதின் அடியில் ஒரு "சுள்" என்ற உணர்வு உன்னைக் கண்டபோது
உன் கண்ணும் என் கண்ணும் மோதிக் கொண்டது
உன்னை கடக்க பயப்பட்டு செல் போன் எடுத்தேன்
நீயும் எடுத்தாய்
அதில் இருந்து அழைத்து வருவதைப் போல நடித்தேன்
நீயும் நடிக்கிறாய் என்றுதான் நினைத்திருந்தேன்
"சொல்லு செல்லோ" என்று ஒரு ஆண் குரல் கேட்கும் வரை!!!
பெண்களுக்கு கானல் நீர்யின் உவமை பொருந்துவது ஏனோ?
என் ஒரே ஆசை இந்த வட்டமான உலகம் சுற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
அடச்சே! முற்றுப்புள்ளியும் ஒரு வட்டம் தானே…



Comments
Post a Comment