ராமர் வேஷம் போட்ட பெலிக்ஸ் | சிறுகதை | சபரி வள்ளி சங்கர்
கொளத்தூர், 1960
முருகேசன் பாயிலேயே மூத்திரம் பெய்துக்கொண்டு இருக்கிறான், அவன் இளமை காலத்தில் முதலியார் வீட்டு சமையல் கட்டில் வேலை செய்துவிட்டு எப்பொழுதும் அவன் பொண்டாட்டி கூட ஒரு பேரு தெரியாத நோய் ஓட கை, கால், பேச்சு, உடம்பு அசைக்க முடியாமல் மலக படுத்து வாழ்த்த நாற்பது ஆண்டுகலும் அசய் போட்டு கொண்டு இருக்கிறான். அவன் வாழ்த்த நாட்கள் ஞாபாகம் வருதோ இல்லையோ நிச்சயம் அவன் உயிர் நண்பன் வந்து அவனை உலுகி விடுவான் எப்பொழுதும் அவன் மட்டும் தனியாக நட்சத்திரங்களாய் மாறிவிட்டான். சிறு வயதில் ஓடும் லாரியின் டயர்க்கு அடியில் ஒடக்கானை கைதில் கட்டி வீசுவதில் தொடங்கிய அவர்கள் நட்பு பெரிய நடிப்பு புயல் என்ற பட்டம் வாங்கினாலும் முருகாசனுக்கு இன்னும் அதே டேய் முருகு இந்த ஒடக்கானை நா விடுறேன் டா னு கெஞ்சி கேட்ட அதேய பெலிக்ஸ் துரைராஜ் தான்.
முருகசேன் பெலிக்ஸ்யை மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் பார்ப்பான் அவன் அந்த என்பதி ஒன்பது நாட்களை எளிதாய் கழிக்க கற்றுக்கொண்ட முருகசேன் அந்த தொண்ணூறாவது நாளை மட்டும் கற்றுக்கொள்ள மறந்தான்; அவன் வேண்டுமென்றே மறந்திருக்கலாம் என்று கூட சொல்லலாம். வலது பக்கமாய் போய் வாங்கி வந்த கருவாடை சந்தேகப்படுவது எடது பக்கமாய் போய் பொறி உருண்டைகளின் மீது உட்காராத ஈக்களை ஷூ ஷூ என்பது கொஞ்ச நேரம் கழிது பலாப்பழத்தை உறிக்க கையில் எண்ணெய் தடவுவது பிறகு வேண்டாம் என்று கை கழுவுவது "சீ எண்ணெய் கைல கை கழுவுறேன் பாரு பைத்தியக்காரன்" னு சொல்லி தலையை அடித்துக்கொள்வது மாய் அந்த நாள் ஓடிப்போகும். பெலிக்ஸ்யை பாத்ததும் அக்கறை இல்லாதவன் போல நடிப்பு புயல் இடமே நடித்து தள்ளுவான் அவனால் அந்த நடிப்பு ஐந்து நொடிங்களுக்கு மேல் நீடிக்காது துள்ளிக்குதித்து அணைத்து, ஒரு நாள் முழுக்க அடைகாப்பான்.
அங்கு நூறு பேத்துக்கு விருந்தளித்து ஜமாய்த்த முருகசேன்க்கு இங்கு ஒத்தாள் பெலிக்ஸ்க்கு சாப்பாடு போட கை நடுங்கும் கொதிக்க கொதிக்க தலைவாழை இலையை வெட்டி வந்து அதில் அதை விட அனல் பறக்கும் சோத்தை அள்ளி வைக்க பெலிக்ஸ் அதில் கருவாட்டு குழம்புகாக குளி அமைப்பான் அந்த சுடு சோத்து குளத்தில் கருவாடு ரெம்பி நீதும். சாப்பிட்டு முடித்தபின் பொறி உருண்டை நொடியில் காலி, ஒரு ஒரு உருண்டைக்கும் ஒரு ஒரு ஊரு கிசுகிசுகள் பின் ஒரு புது பாய் வைத்து சிங்கப்பூர் தலைகாணி ஓடு, கை சூப்பாத குழந்தை போல் பெலிக்ஸ் தூங்குவான். அதுக்கு பிறகு தான் முருகசேன் சாப்பிட உட்காருவான், அவன் கடிக்கும் பொறி உருண்டையில் இருந்து சத்தம் வராத அளவுக்கு கடிப்பான் அதையும் மீறி சத்தம் வந்தால் விருட்டு விருட்டு என்று ஓடி போய் துவைக்கும் கல் கிட்டே போய் சாப்பிடுவான்.
மூணு வருஷம் கழிச்சு எல்லாம் மாரி போச்சு. ஒரு தொண்ணூறவது நாள் முருகசேன் பெலிக்ஸ்யின் வருகைக்காக இறுதி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். தடதடவென்று கதவு அடிக்க பதறிப்போய் குழம்பு கரண்டியை காலில் போட்டுக்கொண்டு "ஓத்தா" என்ற வார்த்தையோடு திரும்பிய முருகேசனுக்கு அதிர்ச்சி, ஒண்டிக்கட்டையாக போன பெலிக்ஸ் எஸ்தர் என்பவளை மணம் முடித்து கூட்டி வந்தான். எஸ்தரை தவிர முருகேசயின் பார்வை வேறு எங்கும் செல்லவில்லை பெலிக்ஸ் "டேய் டேய்"னு அவனைக் குலுக்கிய பிறகுதான் அவன்
சுய நினைவுக்கு வந்தான்
"யாரு டா இவங்க?"
" இவ தாண்டா எஸ்தர் மை வைப்"னு அரைகுறை ஆங்கிலத்தில் சொல்ல எஸ்தர் சிரித்தாள்.
"என்ன டீச்சரம்மா சிரிக்கிற" என்று இடுப்பை கில்ல
முருகேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்
"என்ன ஏன்டா கல்யாணத்துக்கு கூப்பிடல?"
"மன்னிச்சுடுடா திடீர்னு எல்லா நடந்துருச்சு"
"ஹ்ம்ம்"
"நீ ஒன்னும் கவலைப்படாத முருகு குட்டி பெலிக்ஸ் பொறக்குற அப்போ தூள் கிளம்பிடுவோம்"
"ஹ்ம்ம்"
முருகேசனுக்கு எஸ்தரை கண்டாலே பிடிக்கவில்லை அவள் ஏதோ பருந்து போல நினைத்தான்; பெலிக்ஸ்யை தூக்கி செல்லும் பருந்து போல். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் சிடுசிடுனு ஆனாலும் அப்போது முருகேசன் அதை வெளியே காட்டவில்லை "அண்ணா நீங்களும் உக்காருங்க நா பரிமாறுறேன்"னு சொன்னாலோ அப்பொழுதுதான் சுள்ளென்ற காத்து முருகேசனின் தலைக்கேறியது
ரெண்டு எட்டு பின்னால் வந்து அந்த கருவாட்டு குழம்பை உதைக்க குழம்பு எஸ்தர் சேலைகளும் செவத்தில் தெறிக்க முழு பாத்திரமும் உருள ஆரம்பித்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை முருகேசன் எஸ்தரை ஒரு முறைத்து விட்டு துவைக்கிற கல்லை நோக்கி நடந்தான்.
அங்குபோய் பீடியை பற்ற வைத்து பிடிக்கத் தொடங்கும் போது சட்டென்று பெலிக்ஸ் அவன் பனியனை பிடித்து "என்னடா நெனச்சிட்டு இருக்க ஏன்டா அப்படி பண்ண?"
ஒரு கண்ணில் எஸ்தரை பார்த்தான் எஸ்தர் கதவு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள்
"எனக்கு பிடிக்கல" என்று மூணு மூணுதான்
"என்ன"
"எனக்கு பிடிக்கல அவ இருக்கிறது"
"உன்ன பத்தி நிறைய சொல்லி இருக்கேன் டா அவ தான் உன்னை பார்க்க ஆசை ஆசையா வந்தா"
கண்கள் சிவக்கும் கோபத்துடன் "அதான் பாத்துட்டா ல கிளம்ப சொல்லு" என்று கத்தினான்
"முருகு என்ன டா பைத்தியக்காரன் மாதிரி பேசுற"
"இது நம்ப ரெண்டு பேருக்குள்ள நடக்கிற விஷயம் அவளை இதுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லு"
எஸ்தர் இடை மறித்தாள் "பெலிக்ஸ் நா கிளம்புறேன் நீ இருந்துட்டு வா"
"எஸ்தர் மா நீ இரு அவனா நானு இன்னிக்கி பார்த்துடுறேன்"
"இங்க பாரு அவ இருந்த நா இருப்பே இல்லனா கிளம்புறேன்"
இந்த கேட்ட உடனே முருகசேன் விறு விறு என்று வீட்டுக்குள் சென்று எஸ்தர் அவனை பார்க்கும்போதே கதவை டாம்மள் னு சாத்தினான்.
அதற்கு பிறகு முருகேசனும் தொண்ணூறாவது நாளுக்கு காத்திருக்க வில்லை பெலிக்சும் அங்கு தலை காட்டவில்லை. கருவாடும் தெரு நாய்களுக்கு வீசப்பட்டது, இப்படியே நாட்கள் ஓடின ஒருநாள் முருகேசனுக்கு தபால் வந்தது
"முருகேசா இந்த பெலிக்ஸ் லெட்டர் போட்டு இருக்கான்" என்று கூறி போஸ்ட்மேன் தனசேகர் அண்ணன் வீசினார் வீசிய வேகத்தில் அவர் அங்கிருந்து பறக்க ஆரம்பித்தார்.
"அண்ணே கையெழுத்து"
"ஆமா பெரிய சீமையிலே இல்லாத கையெழுத்து போட" கூறிவிட்டு மதுரைவீரன் மேட்னி ஷோ ஓடும் தியேட்டரை நோக்கி விரைந்தார்.
லெட்டரை திறந்தான் முருகேசன்
"டேய் முருகு மன்னிச்சிடு டா அப்ப, ஏதோ கோபத்தில் பேசிட்டேன் ஏதும் நினைச்சுக்காத நான் அடுத்த வாரம் அங்க வருவேன் பார்க்கலாம் (இந்த முறை நான் மட்டும்)..."
என்ற வார்த்தைகளை படித்தவுடன் முருகேசனுக்கு கண்கள் கலங்க எல்லாம் நேரம் கொடுக்கவில்லை அவனை மீறி அவன் கால்கள் திக்குமுக்காடின... ஒரு கட்ட பையை எடுத்துக்கொண்டு சந்திக்கப் புறப்பட்டான் அவனுக்கு அப்போது தெரியாது அங்கு ராமர் வேஷம் போட்டிருந்த பெல்லிக்ஸ்யின் குருதி வானில் சிதறிக் கொண்டிருக்கிறது என்று, சந்தையில் நின்று கொண்டிருந்த முருகேசனுக்கு ஒரு ஆசை வந்தது நம்மளே ஏன் பொறி உருண்ட செய்யக்கூடாது என்று
"அண்ணே ஏழு படி பொறி"
கிட்டு அண்ணன் ஆச்சிரியமாக கேட்டார் "என்ன முருகேசா மறுக்க முதலியார் கூப்பிட்டரு போல"
"அவர் ஆச்சு கூப்பிடுறத ஆச்சு அந்த சிங்கப்பூர் சமையல்காரியை அவரை மயக்கிட்ட அவரு அவ்வளவுதா"
"அப்புறம் எதுக்கு இது"
"பெலிக்ஸ்க்கு னே"
"சண்டைன்னு கேள்விப்பட்டன்"
"அது எல்லா சும்மா லோலோளைக்கு" என்று கூறி முருகசேன் சிரிக்க
அங்கு பெலிக்ஸ் அவனின் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் உடம்பிலிருந்து ஏதோ அறுக்கப்பட்டது கொஞ்ச நேரம் கழிது ஒரு நொண்டி காலண்டி ஏதோ ஒன்றை CSI சர்ச் வளாகத்தில் வீசினான் அது உள்ளே பறந்துபோய் சொத்து என்று தரையில் விழுந்தது அங்கு பயந்து போய் ஒளிந்து இருந்த பாதரின் கவனத்தை பெற்றது அவர் எட்டிப்பார்த்தார் நாமம் போட்டுக் கொண்டை சூடி முகமெல்லாம் நீலக்கலர் வண்ணத்தோடு பெலிக்ஸ்யின் தலை அவரை நோக்கி உருண்டு ஓடி வந்து கொண்டிருந்தது.
முருகேசன் வீட்டுக்கு வந்தவுடனே பொறி உருண்டை செய்ய ஆரம்பித்தான் புதிதாய் மரத்திலிருந்து காய்ந்து விழுந்த பனை ஓலைகளை எடுத்து வந்து ராக்கெட் அடுப்பு அடியில் வைத்து கொஞ்சம் பத்த வைத்த தேங்காய் நார்களை எரிந்து அடுப்பை பத்த வைத்தான். அருவாமனையில் வெள்ளத்தை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு பாவு செய்ய ஆரம்பித்தான், பாவு ஆனதும் பொறியை போட்டு கிண்டும் போது அந்த வாசனை ஊர் எல்லையில் நின்றுகொண்டிருந்த ஊர் காவல்காரனின் மூளையை ஒரு வினாடி கலங்கடித்தது. முருகசேன் ஒரு தலைவாழை இலையை விரித்து தண்ணீரைத் தொட்டு உருண்டை உருட்டினான்.
அங்கு அதே நேரம் எரிந்துகொண்டிருந்த பேருந்தின் வீரியம் குறைந்தது பூட்டியிருந்த கதவுகள் லேசாக திறக்கப்பட்டது, போலீஸ் செறேயின் சத்தத்தைக் கேட்டு மீதம் இருந்தவர்களும் அங்கிருந்து தெறித்து ஓடினர். நொண்டி காலண்டி ஓட முடியாமல் சிக்கினான், சிக்கியவன் மறுநாளே விடுதலை செய்யப்பட்டது இந்த ஜனநாயகத்தின் வேறு பக்க கதை.
கொளத்தூரில் சரியாக மணி ஏழு, எஸ்தர் மயங்கிப் போன நேரம் பெலிக்ஸ்யின் உடல் அவன் வீட்டுக்கு வந்து இறங்கிய தருணம். எஸ்தரின் அப்பா கொண்டு வந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மூக்கை சிந்தி கொண்டே மூன்று ரூபாய் கொடுத்தார். அவன் முதலில் மறுத்தாலும் பிறகு அவன் மகளுக்கு வாங்கவேண்டிய பொம்மையின் விலையை நினைத்து வாங்கிக்கொண்டான். ஊரில் இருந்தவர்கள் ஒரு ஒருவராக வர தொடங்கினர்
அப்படி வந்த இருவர்கள்
"டேய் சிரிக்காத வா டா"
"பிறவு சிரிக்காம இவனுக எல்லா ஆலத்தூர் குள்ள போறதே தப்பு இதுல ராமர் வேஷம் போட்டு ஜங்கு ஜங்குன்னு குதிச்ச வெட்டாம கொஞ்சு வாய்ங்களா"
"டேய் டேய் சும்மாய் இருடா மாட்டிப்போம்"
கூட்டத்திலிருந்த கிட்டு அண்ணன் என நினைத்தார் என்று தெரியவில்லை முருகேசனை கூப்பிட்டு வர முடிவு செய்தார், வெளியே வந்து சைக்கிளை எடுத்து முருகேசயின் வீட்டுக்கு விரைந்தார் அவன் அங்கு இரவு முழுக்க தூங்காமல் ஒரு பைத்தியக்காரன் போல் அந்தப் பொறி உருண்டைக்கு விசிறி விட்டுக் கொண்டிருந்தேன்
"டேய் முருகேசா டேய்" வெளிய சைக்கிளில் உட்கார்ந்தபடி கிட்டு அண்ணன் கத்தினார்
அலுப்பு எடுத்தபடி வெளியே வந்து " என்னண்ணே இன் நேரத்துல"
"கிளம்பு வா போலாம்"
"எங்க னே"
"போற வழியில சொல்றேன் கிளம்பு"
"இரு னே உள்ள எல்லா போட்டபடி அப்படியே இருக்கு இரு எடுத்துட்டு வரே"
என்று சொல்லி உள்ளே போன முருகேசன் ஒரு பொறி உருண்டை உடன் வெளியே வந்தான்.
"அண்ணே இந்த" கிட்டு அண்ணனிடம் நீட்டினான்
முருகேசனின் உண்மை தெரியாத கண்களைப் பார்த்து "இல்ல இல்ல வேண்டாம் பெலிக்ஸ்க்கு பண்ணது தானே அவனுக்கு இருக்கட்டும்"
"ஒன்னு சாப்பிடுவது னால ஒன்னும் ஆய்டாது இந்த"
"கையில அழுக்கா இருக்கு டா"
"ரொம்ப பண்ணாத னே ஆஆஆஆ" என்று அவன் திணிக்க வர அவர் போராட ஒரு வழியாக முருகசேன் வென்று திணித்தான், அவரோ சாப்பிட மறுத்து பிலரி தோற்ற குழந்தை போல் வாயில் அதக்கி கொண்டார்.
போகும் வழி எல்லாம் எங்க எதுக்கு என்ன வேலை என்று கேட்டு கேட்டு முருகேசன் கிட்டு அண்ணனின் உசுரே எடுத்து விட்டான்.
பெலிக்ஸ்யின் வீட்டுக்கு கொஞ்சம் தூரம் முன் சைக்கிளின் வேகம் குறையத் தொடங்கியது கிட்டு அண்ணன் நிறுத்தி நிதானமாக கூறினார் "டேய் எப்ப சொல்லப்போறதா பொறுமையா கேளு"
முருகசேன் சிரித்த படி "என்ன னே ரொம்ப பயன்படுதுரா"
"குறுக்க பேசாம கேளுடா... ஆலத்தூர் ல பெலிக்ஸ் நாடகம் போட போயிருந்தான் ல அங்க -"
திடீரென ஓடிக்கொண்டிருந்த சைக்கிளிலிருந்து முருகேசன் இறங்கினான்
"டேய் டேய் என்ன டா என்ன"
"அவனுக்காக நாடகம் சீக்கிரம் முடிஞ்சுருச்சு அதனால சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டேன் இப்ப வீட்ல எனக்காக காத்திட்டு இருக்கேன் அதானே"
"டேய் முழுசா சொல்ல விட்டுட்டா"
"நீங்க எதுவும் பேச வேண்டாம் நான் கிளம்புறேன் இது என்ன புதுசா இருக்கு எல்லா அவ பண்ணுற வேல எப்பயும் என் வீட்டுக்கு தான் வருவான் நான் அங்க வரமாட்டே" என்று சொல்லி திரும்ப ஆரம்பித்தேன்
கிட்டு அண்ணனின் பொறுமை உச்சத்தை பெற்று வெடித்தது "பெலிக்ஸ் செத்துட்டான் டா அவன் வீட்டுக்குதான் போயிட்டு இருக்கும் மூடிட்டு மொத வண்டியில ஏறு"
முருகேசனுக்கு பெலிக்ஸ் செத்துட்டான் என்பது மட்டும்தான் கேட்டு மற்றதெல்லாம் காற்றில் கலந்தது அவன் நிற்க தெம்பில்லாமல் தள்ளாடி லுங்கில் கால் சிக்கி கீழே விழுந்தான். கிட்டு அண்ணன் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அவனை பிடிக்க முயற்சித்து தோற்றார்.
மண்ணை தொட்ட முருகேசனுக்கு கிட்டு அண்ணனை கண்ணைப் பார்த்து எனக்கு அங்க வர தெம்பில்லை இங்கேயே எனக்கு சமாதி கட்டிரு னே னு சொல்லனு போல இருந்துச்சு ஆனா அவன் வாயில் "நம்ம பெலிக்ஸ் ச எப்படி னே" ங்கிற தா தவிர வேற ஏதும் வரல.
"சொல்லுறேன் டா நீ வா" சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு நொருங்கிய முருகேசனை அள்ளி எழுப்பி தோளில் சாய்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர் அவர்களின் சரசர செருப்பு சத்தம் அந்தப் பாறையை விட சத்தமாய் ஊரை வளம் வந்தது .
அவர்கள் வருவதற்குள் போடுசுயில் இருந்து ஊரு பெரியோர் வரை அனைவரும் வந்திருந்தனர். முருகேசனை திண்ணையில் ஓரமாய் உட்காரவைத்து விட்டு கிட்டு அண்ணன் கிளம்ப நினைத்தார் ஆனால் முருகேசன் இருக்க அவர் கையை பிடித்துக்கொண்டான். அதனால் கூட்டத்திலிருந்து ஒரு போடுசுயை ஒருத்தனை அழைத்து
"டேய் இந்த இரண்டாவது தெருவுல என் சைக்கிள் விழுந்து கிடக்கும் அது கொண்டு வந்து இந்த அண்ணாச்சி கடை கிட்ட நிப்பாட்டு" னு சொல்லி சாவியை கொடுத்தார்.
அவனோ இழித்தபடி வாங்கிக்கொண்டு
"ஹே ரேவதி வா போலாம்" என்று அவன் பக்கத்தில் இருந்தவளின் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து சிறகுடித்தான்.
எல்லாரும் எதுக்காக காத்திருந்தாகளோ அது வந்து சேர்ந்தது அந்த ஆட்டோ நிக்கும் போது எல்லா கண்ணுலயும் பிதி ஊரு பெரியோர் ஓட காது முடிகூட சிலுத்து கிச்சு ன்னா பார்த்துக்கங்களேன் எவனும் நவர சொல்லாமலேயே கூட்டம் விலகிச் அந்தக் கூட்டத்தில கடைசியா நிக்கிற எல்லா எக்கி எக்கி பார்த்தான் பெலிக்ஸ் ஓட மாமா கைல ஒரு கட்டப்பை அவருக்கு பின்னாடி அவர் பொண்டாண்டி இந்த கட்டப்பை வீட்டுக்குள்ள மறைய மறைய கூட்டம் முணுமுணுக்க ஆரம்பித்தது.
அப்படி முணுமுணுத்தவர்கயில் இருவர்கள்
"டேய் மாப்ள இது?"
"ஆமா ஆமா அவன் தல தா"
"தலை எடுக்கிற அளவுக்கு என்னடா கோபம்"
பெருமூச்சு விட்டபடி "சிஎஸ்ஐ சர்ச் வேணும்னு கோவில்காரங்க கேக்குறாங்க இவனுங்க குடுக்க முடியாதுன்னு திமிர் பிடிக்கிறாங்க இப்படியெல்லாம் நடந்ததான் டா இவனுங்களுக்கு எல்லாம் பயம் வரும்"
ஏளனமாய் சிரித்த படி "தம்மாத்துண்டு பொறையா வீசினா மதமாற்ற பிக்காலி பசங்க நம்ம தலையில ஏரி ஆடுரளுங்க"
அவன் நண்பன் தலையைக் குனிந்தபடியே இருந்தது
அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அவன் பொடனியில் ஒருவன் அடித்தான் அவனோ பதறிப் போய் திரும்பி பார்த்தால் அவன் மாமா
" எங்க வந்து என்னடா பேசிட்டு இருக்க "
அவன் ஏதும் பேசவில்லை
"எல்லா உன ஆத்தாளை சொல்லனும் வீட்டுக்கு வரேன் மொத கிளம்பு"
தலையை குனிந்தபடி அவருக்கு மட்டும் கேக்குற அளவுக்கு குரலை ஷக்தி "மாமா இன்னும் கொஞ்ச நேரம்"
"ஒரு மயிரும் வேண்டாம் நாளைக்கு காலேஜ் இருக்குல கிளம்புபோ"
பக்கத்தில் இருந்த அவன் நண்பனைப் பார்த்து சொன்னார்
"நீயும் அவனை பேசவிட்டுட்டு கேட்டுட்டு இருக்காயில்லையா"
அவன் அப்போதும் மௌனம் காத்தான்
அவர்களால் வேறு ஏதும் பேச முடியாமல் காளி அவன் நண்பன் டேனியளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.
வெளியே வரும்போது அவன் முருகேசயின் காலை மெறித்து விட முருகேசன் பிலரினான் அந்த மீதிக்கு பிறகுதான் சமித்துப் போனவன் உயிர்ப்பு எழுந்தான்.
"வெளிய கொண்டு வந்துட்டாங்களா"
"இன்னும் இல்ல முருகாச நீ இங்கேயே இரு நா வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்" என்று சொல்லி அவனை அந்த துணை நம்பி விட்டுட்டு அவர் கிளம்பினார்.
அவர் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே
அவன் உள்ளே செல்ல ஆசைப்பட்டான் மூளையில் ஏதோ ஒரு ஓரம் எஸ்டேரும் கதவை டமால் னு கதவை சாத்திக் கொள்வாளோ என்று பயம் அவனை சூழ்ந்தது. அதனால் அவனை வெளியே வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கேயே உட்கார்ந்து கொண்டான் அதோடு மூளை விட்டுவிடுமா? அந்த முடிவை மூளை குடைய ஆரம்பித்தது வெளியே வரும்போது அவன் முகம் மறைக்கப்பட்டு இருந்தா எனக்கு எட்டாமல் போய்ட்டா கூட்டம் சேர்ந்து என்ன நசுக்கி பின்னாடி தள்ளி விட்டுட்டா அவனை பின் வாசல் வழியே வெளியே கொண்டு போய்ட்டா வீட்டுக்கு பின்னாடி இருக்கிற கிணத்து கிட்டயை புதைச்சுடா அப்பொழுது தான் அவனுக்கு அந்த கேள்வி எழும்பியது "ஆமா நா ஏன் இன்னு அல்லல?"
அந்த கட்டைப் பை உள்ளே வர வர குழந்தைகளுக்கு பொம்மைகள் கொடுக்கப்பட்டன. சில பெண்கள் முந்தானையால் மூக்கை போத்தி கொண்டனர் சில பெண்கள் வேண்டுமென்றே சமையல் கட்டுக்கு டீ காபி போட கிளம்பினார். முடிவெட்டி வந்தவன் எப்படி குடுகுடுவென்று பாத்ரூமை நோக்கி ஓடுவானனோ அப்படி அந்த அந்த பையோடு ஒரு அறைக்குள் சென்றார் பெலிக்ஸ்யின் மாமாவும் அவர் பொண்டாட்டியும். அவர்களைப் பின்தொடர்ந்தனர் எஸ்டேரின் அப்பாவும் ,அம்மாவும். இந்தக் கூட்டம் தலையை யார் கழுவுவது என்று முடிவு செய்வதற்காக
"நம்ம போவோம் வாங்க" அந்த மாமா எஸ்டேரின் அப்பா கையை பிடித்தார்
அவரோ பதறி போய் "அய்யோ நான் வரலப்பா எனக்கு ரத்தத்தைப் பார்த்தாலே கையல நடுங்கும்"
"அத்தை நீங்க"
"ஆள விட்டு பா நா வரல"
"நீ ஆச்சும் வரியா டி"அவர் பொண்டாட்டியை பாத்து கேட்டார் அவள் வாந்தி எடுப்பது போல் மூஞ்சியை வைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள
இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த எஸ்தர் ஒரு வினாடிகூட மறு யோசனை செய்யவில்லை பெலிக்ஸ் மாமாவின் கையில் இருந்து பையை பிடிங்கி அந்த கிணத்தாய் நோக்கி புறப்பட்டாள் . கண்ணை மூடித் திறப்பதற்குள் ஒரு வாளி தண்ணீரை மொண்டு அந்தத் பையை வைத்து திறந்தாள். ஒரு வாழையிலையில் தலை சுருட்டப்பட்டு இருந்தது. எவ்வளவு தான் தைரியமாக முகபாவனைகள் இருந்தாலும் அவளின் தொண்டை பதட்டத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டே இருந்தது.
அவள் முழுதாய்க் பிரிக்கிறது குள்ள அவள் அப்பா அம்மா அங்கு வந்துவிட்டனர்
பிரித்து கொண்டு இருந்த கையை அவள் அம்மா பிடித்து
"பைத்தியக்காரி எழுத்திரி"
கையை உதரி விட்டுட்டு "நீ போ மா நா வரே"
அவள் அப்பா "சாமி நீ எப்ப தா மயக்கம் போட்டு எழுந்திருக்க வேண்டாம் சாமி வா அம்மா பாத்துக்கும்"
அதை சொன்னத்தும் எஸ்டேரின் அம்மா அவரை பாத்து ஒரு முறை முறைத்தாள்
"நீ கேக்குற மாரி தெரியல" அவளுக்கு சமமாக உட்கார்ந்து தலையை பிடுங்க ஆரம்பித்தாள்
"விடு டி சனியன"
எஸ்டேரோ பெலிக்ஸ்யை இருக்கி பிடித்து அவள் மார்போடு சாய்த்துக் கொண்டாள் பெலிக்ஸ்யின் அந்த ஜில்லென்ற உதடுகள் அந்த மார்புகளில் பட பட அவளின் நெத்திப் பொட்டு தெறித்தது போல உணர்ந்தாள் அவள் அப்படியே மண்ணோடு மண்ணாய் சாய்ந்து பெலிக்ஸ்யின் தலையை அவள் சூட்டால் அடைகாத்தாள்.
உள்ளே உட்கார்ந்து இருந்தவர்கள் வெளியே இருந்தவர்கள் அனைவரும் அனைவரும் பின் வாசலுக்கு ஓடினர்.
ரெண்டு நிமிடத்திற்கு முன்னாடி வெளிய இருந்தவர்களில் சிலர் பெலிக்ஸ்யின் உடலை பாக்க குதிங்காலில் நின்றவர்கள் "நீ விடு மா" என்ற எஸ்தரின் கதறல் அவர்களை சுவாரசிய படுத்தியது எப்பொழுது பெலிக்ஸ்யின் உடல் ஆர்வமற்று ஆனது.
முருகசேன்யும் ஒருத்தயின் முதுக்காய் ஞாபகமாய் உபயோகப்படுத்தி உள்ளே வந்தான் பின்னாடி போகும் முன் முருகசேன்யின் கால்கள் பெலிக்ஸ்யின் உடல் முன் நின்றது கூட்டம் எல்லாம் பின் வாசலுக்குப் போய் விட்டது இப்பொழுது அந்த இடத்தில் சாம்பிராணி புகையில் மூடப்பட்ட பெலிக்ஸ்யும் அதை சுவாசித்துக் கொண்டு முருகேசனும் உறைந்தார்கள். அவன் அப்பயும் அழவில்லை.
நடிப்பு புயல் பெலிக்ஸ் அஞ்சு ஊருக்கு மைக் கா போ டா மயிறுனு சொல்லி அந்த ரெண்டு ஜான தொண்டைய வைச்சு கார்ஜிபன்,சுமார் ஆயிரம் சிங்கம் அவன் தொண்டைல இருக்குனு ஊரு பேசும் அப்படிபட அவனை எப்படி நடுல வீட்டுல விட்டாத பாத்துட்டு படுத்துட்டு இருக்கான் இதை யோசித்து கொண்டே பெலிக்ஸ்யை பாக்க நெருங்கினான் பின் வாசலில் இருந்து வந்த திடீர் சத்தத்தால் முருகசேனும் அந்த குதிங்கால் மனிதனாய் மாரி அங்கு விரைத்தான்.
கிட்ட நெருங்க நெருங்க ஏதோ மல்யுத்தம் அரங்குக்குள்ள செல்வது போல உணர்ந்தான்.
அவன் உணர்ந்தது உண்மைதான் எஸ்தர் ஒரு பாயைப் போல சுருண்டு கொண்டு பெலிக்ஸ்யை உள்ளேயே வைத்து பூட்டிக் கொண்டாள் அவளிடமிருந்து தலையை புடுங்க ஒரு பக்கம் அவள் அம்மா மறுமுனையில் அப்பா அது மட்டுமில்லாமல் இன்னும் நாலு ஐந்து ஆண்கள் சேர்ந்த மோதியும் அவளிடமிருந்து அவளின் தலை மயிரை தவிர வேறு எதையும் தொட கூட முடியவில்லை
"விடு டி கழுதை முண்ட"
"நீ விடு டி இது என் புருஷன்" எஸ்தர் கண்களை மூடிக்கொண்டு அவள் மேல் கை வைக்கிற அனைவரையும் வெறி நாயை போல கடித்தாள் வலி தாங்க முடியாமல் ஆண்கள் சிதறினர் களத்தில் மீதம் இருப்பது அப்பா, அம்மா, எஸ்தர்.
எங்கிருந்தோ இடுப்புல சேல நிக்காத தோலெல்லாம் மடிப்பு மடிப்பா ஆன முதுகெல்லாம் கூன் விழுந்து போனா ஒரு கிழவி கூட்டத்தைத் பொளந்துட்டு அந்த களத்துக்கு உள்ள விளக்குமாறு ஓட குதிச்சு எஸ்டேரையும் அவள் அம்மாவையும் சாத்தினாள் ஒரு ஒரு அடியும் சொலுது சொலுதுனு பாஞ்சு. விளக்குமாறு குச்சி எல்லா வானில தூசியை மாறிப்போச்சு கடைசில அடி தாங்க முடியாம எஸ்தர் ஓட அம்மா கைவிட்டா ஆனா இன்னு எஸ்தர் கைவிடவில்லை.
கிழவி "எழுந்தரி டி"
எஸ்தர் தலையை வேகமாக முடியாது என்று ஆட்டினாள்
அடி நிப்பாட்ட பட்டது "கழுவுதா எழுந்தரு போ"
எஸ்தர் அந்தக் கிழவியை பார்த்துவிட்டு அப்படியே அவள் அம்மாவை பார்த்தாள்
"உன் அம்மாவா நான் பாத்துக்குறேன் நீ போ"
எஸ்தரின் அந்த சுருண்ட பாய் விரிந்தது அந்தக் கிழவியின் காவலில் எஸ்தர் பெலிக்ஸ்யின் தலையை கழுவினாள். கழுவும் போது சிலர் மயங்கி விழுந்தனர் பெரும் கூட்டம் பொடிப்பொடியாக மாறியது ஆனால் முருகேசனுக்கு எஸ்தரின் முதுகை தவிர வேறு ஏதும் புலப்படவில்லை கொஞ்ச நேரம் கழித்து
எஸ்தர் கழுவி முடித்து எழுந்தாள் அவள் உள்ளங்கையில் ஒரு கிரீடத்தை ஏந்தியது போல ஏந்தி வந்தாள் அவள் கிட்டே வர வர தான் முருகேசனின் கலங்கிய பார்வை தெளிவானது அவனால் அவன் பார்ப்பதை நம்ப முடியவில்லை உள்ளே இப்படி உறைந்து போனானோ அப்படியே இங்கும் எஸ்தரின் பச்சைக் கலர் சேலையில் தித்திப்பா நீலக்கலர் படிந்து இருப்பதையும் எவ்வளவு கழுவினாலும் அவள் நகத்துக்குயில் ஊடுருவி இருந்த பெலிக்ஸ்யின் முடியை பார்த்தபடி உறைந்து போனான்.
"டேய் போ டா" கிழவி சிலையாக நின்று கொண்டிருந்த முருகேசனை பார்த்து சொன்னாள்
"..."
அந்தக் கிழவியை அவன் கையை பிடித்து ஓரமாக கூட்டி வந்து சில்லென்ற தண்ணீர் மூஞ்சில் தேளித்தது அவன் ஆடு போல சிலுப்பிக் எழுந்தான்.
நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை தொட்டிலில் போடுவதைவிட பொறுமையாக அவன் உடம்போடு தலையை சேர்த்து விட்டு வேறு சேலையை மாத்த உள்ளே சென்றாள்.
அதற்குப் பிறகு யாரும் அழவில்லை சத்தமாக பேசவில்லை கூட்டத்தின் எண்ணிக்கை இரட்டிப்பானது எல்லாருடைய காதுக்குப் பின்னால் பதட்டம் கவலை பயம் என்ற காற்று படபடவென அவர்களை தாக்கி சிலிர்க்க வைத்தது.
அப்படி ஒரு கூட்டத்தை ஒட்டு கேட்டாள் காமாட்சி
"ஆலத்தூர் தேவிடியா பசங்களா ஏதாச்சும் பண்ணனும் டா"
"நம்மளால என்னத்த பண்ணமுடியும் நாம் அஞ்சு பேர் தா இருக்கோம் அவனுக சும்மாவே நாற்பது பேர கூட்டிட்டு வருவானுங்க"
"நம்ம கூப்பிட்டா எல்லாரும் வருவாங்க"
"அஹ ஊம்புவானுக அப்படியே வந்தாலும் நம்ம முதுகுல தா மொத குத்து வானுக"
"முன்னாடி மாரி இதையும் இப்படியே விட்டுட்டு போக சொல்றியா"
"மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லனும்னா ஆமா"
"நீ கிளம்புறது னா கிளம்பு அந்தோணி ஆனா நாங்க இன்னிக்கி ராத்திரி ஆலத்தூர்க்கு போகத்தா போகிறோம்"
இதைக் கேட்டுவிட்டு காமாட்சி சமையல் கட்டுக்கு சென்றாள் அங்கே பேசிக்கொண்டு இருந்தவர்களின் மனைவிகள் இங்கே அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்
"வா டி உன்ன பத்தி தான் பேசிகிட்டு இருந்தோம்"
காமாட்சி சொல்ல வந்ததை சொல்ல விடாமல் குறுக்கே இடை மரித்தனர்
"ராத்திரி உங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல உன் மாமியார் படுத்துகிறாலாமே அப்படியா"
"என்னடி அவ குழந்தையும் கேட்கிற நடுவேலையும் வந்து படுத்துகிற இப்படி டி" காமாட்சியை தவிர அங்கிருந்த அனைவரும் வாயை மூடி மெதுவாக சிரித்தனர்
சிரித்துக் கொண்டே இருந்த எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு
"போதுமா சிரிச்சா"
"ஹே மன்னிச்சிருடி சும்மா பொழுது போகலனு"
"ஓ அப்படியா உன் புருஷன் இன்னிக்கு ராத்திரி ஆலத்தூர்க்கு போன்றனமா அங்க போ நல்லா பொழுது போகும்"
"எனது"
"உன் புருஷன் மட்டும் இல்ல எல்லா ஆம்பளைங்களும்"
கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தலை பிடித்து படி கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் "என் தாலி அறக்கருத்துக்குனே அவன் இருக்கானா ஒவ்வொரு நாளும் ச்சை" தலையை அடித்துக் கொண்டாள்.
"சோபி அழாத நா போய் என் புருஷன் கிட்ட பேசுறேன்"
காமாட்சி இடைமறித்தாள் " ஏய் நீ போன சரியா இருக்காது எஸ்தரா கூப்பிடலாம்"
"பைத்தியக்காரசி திரியே அவதான் டி"
"சாச்சா அவள எனக்கு ஸ்கூலில் இருந்தே தெரியும் அவயெல்லா அப்படி இல்லை"
"என்னமோ பண்ணித் தொலை ஆனா இன்னைக்கு எங்க புருஷங்க ஆலத்தூர்க்கு போக கூடாது" என்று சோபி கட்டளையிட்டாள்.
காமாட்சி எஸ்டேரிடம் விஷயத்தைச் சொன்ன பிறகு எஸ்டேர் அவள் பைபிள்ளை எடுத்துக்கூக்கொண்டு ஆண்களுடன் பேச சென்றாள்
"ஆலத்தூர்க்கு போறீங்களா ணா"
"இல்லம்மா இல்ல"
"பொய் சொல்லாதீங்க"
"இங்க சும்மாவே உட்கார்ந்து இருக்க சொல்றியா மா நம் ஏதாச்சு பண்ணனும் ல"
"பண்ணணு தா னா ஆனா நீங்க சொல்ற மாதிரி இல்ல கோர்ட்டுக்குப் போகணும்"
"கோர்ட் கா? எஸ்தர் இது போலீஸ் ஸ்டேஷன்ல கூட நிற்காது இந்நேரம் அவர் ஜாமீனில் வாங்கிட்டு போய் இருப்பானுங்க"
"நீங்க ஒன்னு மறந்துடாதீங்க அவனுக இன்னும் கர்த்தருடைய பார்வையில் தா இருக்கானுங்க அவனுக எங்கயும் தப்பிக்க முடிகிறது அவரு என்ன பண்ணுறாரோ அந்த பண்ணட்டும் நம்ம என்ன பண்ணணுமோ அதை பண்ணுவோம் ஆனா ஒண்ணு மட்டும் உறுதி அந்த பயங்கலுககு தூக்கு வாங்கி தராம நா சாக மாட்டேன்"
பேசி முடிந்து விட்டு எஸ்டேர் அவர்கள் முன் அவள் கொண்டு வந்த பைபிளை நிடி
"அண்ணா ஆலத்தூர்க்கு போக மாட்டிங்கனு சத்தியம் பண்ணுங்க"
கொஞ்சம் நேரம் யோசிச்சு விட்டு அணையாரும் பைபிள்யில் சத்தியம் செய்தனார்.
பெலிக்ஸ்யின் உடல் சர்ச்சுக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து முடிந்து ஊர் பவனியேடு சர்ச்க்கு கொண்டுவரப்பட்டது. முருகேசன் நினைத்தது மாறியே கூட்டத்தில் அவனை நசுக்கி பின்னால் தள்ளிவிட்டனர் கிட்டு அண்ணனும் பின்னால் தான் இருந்தார்.
"நீ எங்கனே போய்ட்டா"
"வீட்ல ஒரு சின்ன பிரச்சனை டா அதான் போய் பாத்துட்டு வந்தேன்"
என்ன என்று கேட்க கூட அவனுக்கு வாய் வரவில்லை பல கேள்விகள் ஒரே குழப்பம் அங்கு வந்த எல்லாருடைய முகத்தையும் பார்த்தான் எல்லாரும் அழுது கொண்டிருந்தனர் அவன் மூளைக்குள் மடிந்து இருந்த கேள்விகள் ஒவ்வொன்றாய் விரிய ஆரம்பித்தது பெலிக்ஸ்க்கு முன்னாடி சபித்தவன், அவன் பின்னாடி கேலி செய்தவன்,
ஏமாற்றியவன், அவன் முழுப்பெயர் கூட தெரியாத நாதாரி எல்லா அழ மோது எனக்கு ஏன அழ வரமாட்டேங்குது அவளோ பேசியிருப்போம் அவள் ஆடி பாடி இருப்போம் எப்ப கேட்டாலும் எனக்காக சிவாஜி மாதிரி அப்படி நடித்து காட்டுவான் எ.ஜி.ஆர் மாதிரி ஸ்டைல் பண்ணி காட்டுவான் எத்தனையோ சட்டி சோறு கருவாட்டு குழம்பு அந்த வயித்துக்குள்ள போயிருக்கு இந்த கைதான அல்லி போட்டுச்சு அப்புறம் ஏன் எனக்கு அழ வரமாட்டேங்குது ஒருவேளை அவன் என்கிட்ட ஒடக்கான் கேட்டான் நான் கொடுக்க முடியாது போ டா னு சொல்லிட்டேன் அவ அழுதுட்டு போயி எதுத்த வீட்டு ஸ்டீபன் ஓட கோலிகுண்டு விளையாண்டு சாயங்காலம் என்கூட விளையாட வந்தான் நா அவன்கிட்ட எதுவுமே கேட்கல அப்புறம் அந்த நாள் முழுக்க அவன் என்ன முருகு முருகு னு கூப்புடா மோது எல்லா கோபம் பொத்துகிட்டு வந்துச்சு ஆனா வெளிக்காட்டிக்கல ஒருவேளை இப்ப அதனாலதான் அழுகலியோ இப்படி பல லட்சக் கேள்விகள் அவன் மண்டையில ஓடிக்கிட்டே இருந்துச்சு பெலிக்ஸ் அவ அம்மா அப்பா கள்ளரிலேயே அவனையும் புதைசாங்க
"யாரெல்லாம் பூ போடுறீங்களே எல்லாரும் டக்கு டக்குனு வாங்கப்பா" னு கூப்புடுறப்போ ஒவ்வொருத்தனா பெலிக்ஸ் மேல அழுதுட்டே பூப்போட்டு போயிட்டு இருந்தான் ஒருத்தன் எல்லா அங்கியோ கதறிட்டு உட்கார்ந்துடன் அதப் பாத்துட்டு முருகசேனுக்கு பயம் வந்துடுச்சு நம்ம இப்ப அலல அவ்வளவுதான் உயிர் நண்பன்க்கு கூட அழ தெரியாத மிருகம் தானே நீ னு பேரு வந்துரும் அப்றம் தலைகாட்ட முடியாது இந்த யோசிச்சிட்டு இருக்கும்போதே கிட்டு அண்ணன் முன்னாடி போயிட்டாரு அடுத்தது இவன் தான் என்ன பண்றதுன்னு தெரியாம ரெண்டு கையும் கட்டிட்டு அவன் அல்லை ல நறுக்குன்னு கில்லிகிட்டான் இன்னும் கொஞ்சம் அழுத்தி இருந்தா னா அவன் தசை கையோட வந்தது இருக்கும் அப்படிக் இல்லையோ அவனுக்கு அலுகை வரவே இல்லை
"யோசிக்க எல்லா நேரம் இல்ல டக்குனு வா" கிட்டு அவனை வரச் சொல்லி கத்தினார்
எப்பொழுதும் அனைவரின் பார்வையும் முருகேசன் மேல் தான் இருந்தது சுத்தி முத்தி முருகேசன் பார்த்துவிட்டு "என் பெலிக்ஸ் சாகல என் கூடத்தான் இருக்கான் அந்த நாளா நா பூ போட்ட மாட்டேன்" னு சொல்லி தப்பிச்சுட்டேன்
இதைக் கேட்டு அப்படியே அங்க பிரளயமே கிளம்பி விடும் என்று நெனச்சேன் ஆனா யாருமே இவனை ஒரு பொருட்டா கூட மதிக்கல "அப்றம் அவளொ தானே பாஸ்கர்ரு ஹ்ம்ம் ஆரம்பி" பாஸ்கரும் அவன் பக்கத்தில் இருந்தவனும் தோண்டிய மண்ணை மீண்டும் உள்ளே சரித்தனர்.
முருகேசன் வீட்டுக்கு வந்தான் அங்க அவன் ஏதோ சொல்லி ஏமாற்றினாலும் அவன் மனசை ஏமாத்த முடியல வீட்டிலிருந்த தனிமையோ என்னனு தெரியல குற்ற உணர்ச்சி அவனா அக்கிரமச்ருச்சு அவன் கல்லறையில் பண்ணத யோசிச்சு யோசிச்சு அவன் பண்ண பொறி உருண்டையா வீசின மாறி பழைய முருகேசனையும் கண்காணாத இடத்துல விசிட்டான்.
ரெண்டு வருஷம் கழிச்சு முருகேசனுக்கு கல்யாணம் ஆச்சு அவ பேரு கனகா அவ சாதாரண பெண்ணல்ல அவ சாமி.அவளுக்கு பொசுக்கு பொசுக்குன்னு அவ அப்பன் மாரி கோவம் வந்தாலும் முன்ன சொன்ன மாதிரி அவ சாமி. கனகா முருகேசனுக்கு அத்த பொண்ணு. கல்யாணத்துக்கு அப்புறம் முருகேசன் நல்லா தா இருந்தான் அப்படின்னு அவன் தான் சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருந்தான் முதல்ல கண்ணு சரியா தெரியாம போச்சு அப்புறம் கைகால் மறுக்க ஆரம்பிச்சுச்சு அப்புறம் உடம்பு எல்லா செல மாதிரி ஆயிடுச்சு எத்தனையோ ஆஸ்பத்திரி போனாலும் காசு காசுன்னு குழைச்சுடே இருந்தானுங்க ஒருநாள் முருகேசனுக்கு பேச்சும் நின்று போக கனகாவுக்கு நம்பிக்கை போச்சு முருகேசனுக்கு நம்பிக்கை போய் நாலு வருஷம் ஆச்சு. அவன் அவனுக்கே என்ன சொல்லிக்கிட்டான் னா இதுக்கெல்லாம் காரணம் நா அன்னைக்கு பெலிக்ஸ்க்கு பூ போடல அந்த நாளா தா இது எல்லாம் அன்னிக்கு நான் அழல அதனால்தான் என் கண்ணு போச்சு நான் அவனுக்கு பூ போடல அத்தான் என் கையை விலக்காம போச்சு அவன கடைசியா போய் பாக்கல அந்த நாளாதான் என் கால் போச்சு அங்க போய் பேசினேன் அதனாலதான் என் வாய் போச்சு அப்படினு உறுதியா நம்பினான்.
இப்போ கனகா எங்கேயோ பாத்துட்டு ஏதோ யோசித்து சமைச்சு இருக்கா ஏய் சாம்பார் அடி பிடிக்கிறது டி னு கூட சொல்ல முடியாத நிலைமை முருகேசனுக்கு. சாப்பிடறதுக்கு முன்னாடி மாத்திரை எல்லா கொடுத்துட்டு ஒரு தட்டில் சாப்பாடு போடு சாம்பார் ஊத்தி எடுத்திட்டு வந்து அந்த ஈரமான பாய் மேல உட்கார்ந்து ஊட்டிவிட ஆரம்பிச்சா கையில இருக்கிற சாப்பாட்ட ஊதி ஆரவைக்காம வேற எல்லா பக்கமும் ஊதி ஏதோ யோசனையில் முடங்கிப் போனா
பட்டுனு பேச ஆரம்பிச்சா
"என்ன மன்னிச்சிடுங்க"
முருகேசன் அவள் கண்களில் பார்ப்பதாக நினைத்து செவுத்தை பார்த்தான்
"உங்க அம்மா சாகும் போது ஒரு விஷ பாட்டிலை என்கிட்ட கொடுத்து உன்னால அவனை பார்க்க முடியாது கொன்னுடு னு சொல்லி கொடுத்துச்சு"
சிறிய புன்னகையுடன் "பயப்படாதீங்க நா கலகல"
முருகேசனும் சிரித்தான்
சிரித்துக் கொண்டிருந்தவாள் சொல்ல வந்த விஷயத்தை உடைத்தாள்
"ஆறு மாசமா ஸ்கூல் டீச்சர் செல்வத்தை காதலிக்கிறேன் இன்னிக்கு நாங்க ஓடிப் போகப் போறோம் உங்களை தூங்க வைத்துவிட்டு"
முருகேசன் சிரிப்பு தொடர்ந்தது
"சிரிக்காதீங்க நான் நெசமாத்தான் சொல்றேன் அவரு வெளிய தான் காத்துக்கிட்டு இருக்கார்"
அப்பயும் முருகேசன் சிரித்துக் கொண்டேதான் இருந்தான்
எப்பயும் போல வெடுக்குன்னு கோவம் வந்தது கனகாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தவள் எழுந்துபோய் தட்டைக் கழுவி விட்டு பீரோவிலிருந்து நகைகளையும் பணத்தையும் எடுத்து அவளின் கட்ட பைக்குள் சொருகிக் கொண்டாள்.
முருகேசனை திரும்பிக்கூட பார்க்காமல் "நா போறேன்" என்று
சொல்லி கிளம்பினாள் முருகேசன் ம்ம் ம்ம் என்று முனகிக் கொண்டு கட்டிலை ஆட்டினான் போய்க்கொண்டிருந்த கனகாவின் கால்கள் நின்று முருகேசனை நோக்கி வந்தது
கண்கள் முழுக்க கோபத்துடன் "இப்போ உனக்கு என்னயா வேணும்" முருகேசன் அவளிடம் ஏதோ சொல்ல முயற்சிதான்
"என்னது"
மீண்டும் சொன்னான்
இந்த முறை முருகேசனின் வாய்கிட்டே அவள் காதை வைத்துக் கேட்டாள்
முருகேசன் அவனால் எக்க முடிந்த அளவுக்கு எக்கி அந்த சொரசொர னு காஞ்சி போய் இருக்கிற அவன் வாய வெச்சு கனகா ஓட காது கிட்ட ஜில்லென்ற முத்தத்தை கொடுத்தான்
அந்த ஒரு முத்தத்தில் கனகா ஓட கோபம் தூசியாய் அவள் முன்னாடி பறந்து போனது அவளை அறியாமலே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி முருகேசன் கன்னத்தில் விழுந்தது அவள் அழுகையை பார்த்து முருகேசன் புன்னகை சிறிது கனகா முருகேசனின் கண்களை பார்த்தாள் இந்த முறை சரியாக கனகாவின் கண்களைப் பார்த்த முருகசேன் அவன் கண்ணை மெதுவாக சிமிட்டினான். கனகாவுக்கு அழுகை பிறி கொண்டு வந்தது அழுதுகொண்டே அந்த சிமிட்டிய கண்களுக்கு முத்தத்தைக் கொடுத்து விட்டு புறப்பட்டாள்.
கதவு வெளியே தாள் போடப்பட்டது சமையல்காரன் முருகேசன் ஒரு காலத்தில் இந்த ஊரை காலுக்குக் கீழ் வைத்திருந்த முதலியாரை அவன் சமையலுக்கு கட்டிப் போட்டிருந்த சமையல் கில்லாடி முருகேசன் னு பட்டம் வாங்கின அவனுக்கு தெரியாத அந்த சாம்பாரில் விஷம் கலக்கப்பட்டு இருக்கிறது என்று.



❤️❤️❤️❤️❤️
ReplyDeleteNandri thala 😍😍
Delete